மேலும் செய்திகள்
சாலை சீரமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிக்கல்
15-Apr-2025
ஈரோடு:ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.கீழ்பாலமாக உள்ளதால் மழை நீர், வடிகால் கசிவு நீரும் எப்போதும் தேங்கும். அந்நீர் வெளியேற பாலத்தின் கீழ்பகுதியில் வடிகால் அமைத்துள்ளனர். அதனை இரும்பு கம்பியால் மூடியுள்ளனர். கனரக வாகனங்கள் செல்லும்போது வடிகால் உடைந்தும், சில கல், செங்கல் நகர்ந்தும் பள்ளம் ஏற்படும். தற்போது அதுபோன்ற பள்ளம் ஏற்பட்டு, இரும்பு கம்பி உடைந்து, வாகனங்களின் டயர்கள் சிக்கும் அளவு இடம் ஏற்பட்டுள்ளது.இதை சரி செய்யாமல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் இரும்பு தடுப்பு கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக வைத்துள்ளனர்.அதிக வாகனங்கள் செல்வதால், டூவீலரில் செல்வோரின் கால், கார் போன்ற வாகனங்களின் பக்கவாட்டு பகுதியை கிழித்து விடுகிறது.இரவில் இது தெரியாமல் பல வாகனங்கள் இடித்து நிற்கின்றன. உடனடி நடவடிக்கை விரைவாக எடுப்பது அவசியம்
15-Apr-2025