உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேரனுடன் மகள் மாயம்: தாய் புகார்

பேரனுடன் மகள் மாயம்: தாய் புகார்

ஈரோடு, புதுக்கோட்டை இலுப்பூர் ஈஸ்வரன் கோவில் கிராமம் இருதுபட்டியை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் மனைவி வனிதா, 23; இவர்கள் மகன் ஹரி கிருஷ்ணன், 2; வனிதாவின் பெற்றோர் முத்தரசு-மூக்காயி தம்பதி, சிவகிரி பள்ளகாட்டில் வசிக்கின்றனர். கணவருடன் சண்டை ஏற்படும் போதெல்லாம் தாய் வீட்டுக்கு குழந்தையுடன் வனிதா செல்வது வழக்கம். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூவரசனுடன் அவர் சென்று விட்டார். பேரனையும் எடுத்து சென்று விட்டார். மகள், பேரனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று தாய் மூக்காயி அளித்த புகாரின்படி, சிவகிரி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை