மகள் மாயம்; தந்தை புகார்
பவானி: ஆப்பக்கூடல் அருகே ஓசைபட்டியை சேர்ந்தவர் வடிவேல், 53; இவரின் இளைய மகள், ரூபா, 22; தனியார் நர்சிங் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. இரு தினங்களுக்கு முன்பு ரூபாவை திட்டியுள்ளார். இதனால் அருகிலுள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்-றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. வடிவேல் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.மகளுடன் மனைவி மாயம்கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் ரகுராம், 26, ஆட்டோ டிரைவர்; இவரின் மனைவி சகானா, 26; தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 11ம் தேதி முதல் குழந்தையுடன் மனைவி மாயமாகி விட்டதாக, ரகுராம் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.