உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

பவானி; பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த லதா மகள் ஜெயபிரபா, 34; ஈரோட்டில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், இரவு வீட்டிக்கு வரவில்லை. துணிக்கடையில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜெயபிரபா வேலைக்கே வரவில்லை என்பது தெரிந்தது. மகளை கண்டுபிடித்து தருமாறு லதா அளித்த புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்-றனர்.* கோபி அருகே எ.செட்டிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியம் மனைவி ஆர்த்தி, 25; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆர்த்தி கடந்த, 11ல் மாயமானார். சுப்பிரமணியம் புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ