மகள் மாயம்; தாய் புகார்
கோபி:சத்தியமங்கலத்தை அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தாட்சாயிணி, 20; தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவி. கடந்த, 23ல் கல்லுாரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் இந்திராமதி புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியை தேடி வருகின்றனர்.