மேலும் செய்திகள்
108 விநாயகர் சிலைகள் சோமனுாரில் பிரதிஷ்டை
21-Aug-2025
தாராபுரம், சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில், தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம், கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தாராபுரத்தில் நேற்று நடந்தது. இதில் தாராபுரம் நகர் மற்றும் கொண்டரசம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஆலாம்பாளையம், கணபதிபாளையம் உள்பட, 80க்கும் மேற்பட்ட இடங்களில் 108 விநாயகர் சிலைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மூன்று நாட்கள் பூஜை செய்து வழிபட்டு, அமைதியான முறையில் ஊர்வலத்தில் பங்கேற்பது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. தாராபுரத்தில், 27ல் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், 29ம் தேதி ஊர்வலமாக எடுத்து சொல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்படுகிறது. முன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், திரைப்பட நடிகை கஸ்துாரி பேசுகிறார்.
21-Aug-2025