உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மான் வேட்டையாடியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

மான் வேட்டையாடியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் காப்புக்காட்டில், நேற்று காலை அரூர் பிரிவு வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ்குமார் மற்றும் வனக்காவலர் சிற்றரசு ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாக்குமூட்டையுடன் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வேலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி, 35, என்பதும், பைக்கில் உள்ள ஆக்சிலேட்டர் ஒயர்களை கொண்டு, 7 இடங்களில் வலை கட்டியதாகவும், பின், மான்களை விரட்டிய போது, அதில் மாட்டிய ஆண் மானை சாக்குமூட்டையில் கட்டி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, உயிரிழந்த மான், ஆக்சிலேட்டர் ஒயர்கள் மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர். வேட்டையில் ஈடுபட்ட மூர்த்திக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை