உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயிர் காப்பீட்டை அரசுத்துறை நிறுவனம் நடத்த கோரிக்கை

பயிர் காப்பீட்டை அரசுத்துறை நிறுவனம் நடத்த கோரிக்கை

பயிர் காப்பீட்டை அரசுத்துறைநிறுவனம் நடத்த கோரிக்கைஈரோடு, நவ. 22-இந்திய கம்யூ., சார்பிலான, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம் மாநில துணை தலைவர் துளசிமணி தலைமையில், ஈரோட்டில் நடந்தது. மாநில செயலாளர் மாசிலாமணி, துணை செயலாளர் இந்திரஜித், முன்னாள் எம்.எல்.ஏ., உலகநாதன், சிவசூரியன் உட்பட பலர் பேசினர். வரும், 26ல் தேசிய அளவில் நடக்கும் போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்தனர். பயிர் காப்பீட்டை தனியார் நிறுவனங்களை தவிர்த்து, அரசு துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ