ஆர்ப்பாட்டம்... ஆர்ப்பாட்டம்..
. ரயில்வே தொழிலாளர்கள் லோகோ மற்றும் போக்குவரத்து இயக்க பணியாளர்களின் பணிப்பிரிவு மதிப்பாய்வை விரைவுப்படுத்தி, டி.எம்.ஆர்.பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் டி.எம்.ஆர்., இல்லாமல் சரக்கு ரயில்களை இயக்குவதற்கான உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கோட்ட பொறுப்பாளர் மணிவண்ணன், சேலம் கோட்ட தலைவர் நவீன், கோட்ட செயலாளர் பாஸ்கர், ஈரோடு கிளை செயலாளர் தர்மன், ஓடும் தொழிலாளர் சங்கத்தின் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகள்அனைத்து அரசு பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் சத்தியமங்கலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். கடந்த, 2003 ஏப்.,1க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். புதிய நிமனங்களுக்கு மறைமுக தடையை உருவாக்கும் அரசாணை எண்: 115, 152ஐ திரும்ப பெற வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையாக அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.