உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 27-ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பொருளாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். சங்க தலைவர் சுப்ரமணியன், செயலாளர் மாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துாய்மை பணியை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை