மேலும் செய்திகள்
'வரும் முன் காப்போம்' சிறப்பு மருத்துவ முகாம்
21-Oct-2024
ஈரோடு, நவ. 17-அம்மாபேட்டை, ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு, பாதுகாப்பான குடிநீர் அவசியம் குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.காசநோய் பரவும் விதம், இலவச பரிசோதனை, சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி பயன்பாடு, டெங்கு பரவல் மற்றும் தடுப்பு முறை, கொசு உற்பத்தி தடுப்பு வழிகள், மழைக்கால நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர்கள் பிரசாந்த், பிருந்தா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், ஆய்வாளர்கள் கருணாமூர்த்தி, யோகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி மூலம் மார்பக நுண் கதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
21-Oct-2024