உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்பவானி, நவ. 28-பவானி நகர தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அந்தியூர்-மேட்டூர் பிரிவில், நகர செயலர் நாகராசன் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மூத்த நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கள், 470 பேருக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.* அந்தியூர் பேரூர் செயலர் காளிதாஸ் தலைமையில், பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அந்தியூர் டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.* நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும், நம்பியூர் ஒன்றிய செயலருமான செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மலையபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.* டி.என்.பாளையம் யூனியனுக்கு உட்பட்ட பெருமுகை, கணக்கம்பாளையம், புஞ்சை துறையைம்பாளையம், வாணிப்புத்துார், டி.என் பாளையம் உள்ளிட்ட அரசு பள்ளி மாணவ மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. டி.என். பாளையம் ஒன்றிய செயலர் சிவபாலன், வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை