உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி திட்டப்பணி தொடர்பான கூட்டம்

வளர்ச்சி திட்டப்பணி தொடர்பான கூட்டம்

ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், அரசின் திட்-டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நலத்-திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய நடவ-டிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து திட்டப்பணிகள், நலத்திட்டங்கள் போன்றவை குறித்து அந்தந்த துறை வாரியாக ஆய்வு செய்து, விரைவாக தீர்வு காணவும், பணிகளை முடிக்-கவும் நடவடிக்கை எடுக்க யோசனை தெரிவிக்கப்பட்டது.கூடுதல் கலெக்டர் சதீஸ், மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்த-குமார், மாவட்ட வன அலுவலர் ஈரோடு குமிலி வெங்கட அப்-பால நாயுடு, ஆசனுார் சுதாகர், சத்தியமங்கலம் துணை இயக்-குனர் குலால் யோகேஷ் விலாஷ், கோபி சப்-கலெக்டர் சிவா-னந்தம், பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாஷ் உட்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி