உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புரட்டாசி கடைசி சனி வழிபாடு அமோகம் பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி கடைசி சனி வழிபாடு அமோகம் பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் அதிகாலை தொடங்கி மாலை வரை, கோவில்களில் கூட்டம் களை கட்டியது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் விஜயதசமி நாளான நேற்று, பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் சென்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஈரோட்டில் கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.* கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாளுக்கு அதிகா-லையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதி, குள்ளம்பாளையம், வரத-ராஜ பெருமாள் கோவில், பச்சைமலை மரகத வெங்கடேச பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை* பவானி அருகே பெருமாள்மலை கோவிலுக்கு, அதிகாலையி-லிருந்து பக்தர்கள் வர தொடங்கினர். ஸ்ரீதேவி பூதேவி சமேத மங்களகிரிநாதரை தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்-தர்கள் குவிந்ததால், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆதிகேசவ பெருமாள் கோவில், ஊராட்சிக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.* நம்பியூர் விக்ரம நாராயண பெருமாள் கோவில், வேமாண்டம்-பாளையம் அருகே கோட்டை பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை வழிபாடு களை கட்டியது. இக்கோவில்களில் காலை முதலே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம் ஆதிநாரயணப்-பெருமாள் கோவில் அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்-பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரா-தனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. முருங்கத்தொழுவு கிராமம், வடுகபாளையம் அடுத்துள்ள மலை மீதுள்ள அணியரங்கப்பெ-ருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம்பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில், மற்றும் சென்னிமலை செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !