உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூசாரிகள் தகராறால் பக்தர்கள் அதிர்ச்சி

பூசாரிகள் தகராறால் பக்தர்கள் அதிர்ச்சி

ஈரோடு, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், பூஜை செய்யும் உரிமம் மாதத்துக்கு ஒரு முறை மாறும். இது தொடர்பாக பட்டர்களிடையே (பூசாரிகள்) நேற்று முன்தினம் காலை, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தகாத வார்த்தை பேசிக்கொண்டனர். இதைக்கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதுபற்றி கோவில் செயல் அலுவலர் ஜெயலதா கூறியதாவது: பிரச்னை செய்த நால்வரும் ஒரே குடும்பத்தினர். குடும்ப பிரச்னையை தீர்க்க இங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவில் ஊழியர் இல்லை. உதவிக்காக பூஜைக்கு அழைக்கப்பட்டனர். தேர்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை பூஜை செய்ய வர வேண்டாம் என நால்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை