மேலும் செய்திகள்
முருகன் கோவிலில் பாலாபிேஷக பூஜை
30-Oct-2024
காங்கேயம்: ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாக கருதப்-படுகிறது. இம்மாதத்துக்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இந்நிலையில் ஐப்பசி அமாவாசை தினமான நேற்று, காங்கே-யத்தை அடுத்த சிவன்மலை முருகன் கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோபூஜையை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு தம்பதி சமேத-ராக சுப்ரமணியசுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உச்சி-கால பூஜை நடந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால், வழக்-கத்தை விட பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். வரி-சையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
30-Oct-2024