மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
15-Jan-2025
கரூர்: கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு, பொது மக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்-படைத்தனர்.கரூர் மாவட் டம், ஆட்சிமங்கலம் கோடங்கிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 31, டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், சாலை புதுார் பகு-தியை சேர்ந்த, அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும், ஏழு வயது சிறுமியை கடந்த, 7ல் மாலை, மாரியப்பன் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்-துள்ளார்.இதையறிந்த, அப்பகுதி மக்கள் மாரியப்பனை பிடித்து, தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கி-யதில் காயமடைந்த மாரியப்பன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார், மாரியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து விசாரிக்கின்றனர்.
15-Jan-2025