உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டில் மனை பட்டாவா? வெங்கலம் மக்கள் வேதனை

சுடுகாட்டில் மனை பட்டாவா? வெங்கலம் மக்கள் வேதனை

ஈரோடு, கொடுமுடி டவுன் பஞ்., வெங்கலம், 13வது வார்டை சேர்ந்த சுப்பிரமணி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: வெங்கலம் என்ற ஊரில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 120 ஆண்டுக்கு மேல் வசிக்கிறோம். இங்கு போயர், நாடார், நாவிதர் உட்பட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதுடன், கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டாக, இங்குள்ள ஒரு இடத்தை இடுகாடாக பயன்படுத்தி வருகிறோம்.கடந்த வாரம் இப்பகுதி வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., ஆகியோர் அவ்விடத்தை அளவீடு செய்து, மண் நிரவி, எலும்புகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுபற்றி கேட்டபோது, அந்த இடத்தை இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்கவுள்ளதை அறிந்தோம். அவ்வாறு வழங்கக்கூடாது. சுடுகாட்டை பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை