குண்டு எறிதல் போட்டிக்கு உதவி டி.ஆர்.ஓ.,விடம் மாற்றுத்திறனாளி மனு
ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், சிவகிரி அருகே சின்னவீரசங்கிலி கிழக்கு தோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்தி என்பவர், தனக்கு உதவி வழங்க கோரி மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:நான் குண்டு எறிதல் போட்டியில், உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளேன்.இப்போட்டி வரும், 26ல் டில்லியில் நடக்க உள்ளது. நான் உட்பட தமிழகத்தை சேர்ந்த, மூன்று பேர் விளையாட உள்ளோம். உலக சாம்பியன் ஷிப் போட்டி, ஆசிய சாம்பியன் ஷிப் போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி விடுவேன்.எனவே, இப்போட்டிகளுக்கு செல்ல, எனக்கு 'ஸ்போர்ட்ஸ் வீல் சேர்' உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது. இவற்றை செய்து கொடுக்க உதவ வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.