உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரிசு அடிப்படையில் பணி 22 ஆண்டாக ஏமாற்றம்

வாரிசு அடிப்படையில் பணி 22 ஆண்டாக ஏமாற்றம்

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தலையூர் இந்திரா நகர் தனசிங் மகள் பிரியதர்ஷினி மனு வழங்கி கூறியதாவது:எனது தந்தை தனசிங், ஈரோடு அரசு போக்குவரத்து கழகம், 'ஈ2' கிளையில் கேன்டீன் சீறாளராக பணியாற்றினார். கடந்த, 2003 பிப்., 24 ல் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது ஒரே மகளான நான், தற்போது முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். என் தந்தை இறந்த நிலையில், 22 ஆண்டாக வாரிசு அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி கோரி முறையிடுகிறேன். கலெக்டர் அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் என பல முறை மனு வழங்கியும் எனக்கு பணி வழங்காத நிலையில், 2007 ல் ஒரு பணியாளர் இறந்த அடிப்படையில் அவரது வாரிசுக்கு பணி வழங்கி உள்ளனர்.சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கவில்லை. இதுபற்றி, அதிகாரிகளிடம் கேட்டால், 'தெரியாமல் நடந்துவிட்டது. இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என்கின்றனர். இதுபற்றி விசாரித்து, பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு பணி வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை