உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி ஈரோட்டில் சிக்காத ஆசாமியால் ஏமாற்றம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி ஈரோட்டில் சிக்காத ஆசாமியால் ஏமாற்றம்

ஈரோடு: ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த ஆசாமி சிக்காததால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஈரோடு, பெரியசேமூரை சேர்ந்தவர் பாலு, 48; ஈரோடு, கொங்-கம்பாளையம், எல்.வி.பி.நகரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரின் மகள் மாரியம்மாள் (எ) தனிகாஸ்ரீ, 26; இவர்கள் நடத்திய ஏலச்-சீட்டுகளில், 2021ல் அழகர்சாமி சேர்ந்தார். சீட்டு முதிர்வடைந்த நிலையில், 7.47 லட்சம் ரூபாய் தரவேண்டும். ஆனால் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார-ளித்தார். இதில் மாரியம்மாளை கடந்த, பிப்.,11ல் போலீசார் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். அழகர்சாமியை பிடிக்க முடி-யாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த, 2019 முதல் ஏலச்-சீட்டு நடத்திய நிலையில், 60 பேருக்கு மூன்று கோடி ரூபாய் அள-வுக்கு பணத்தை தரவில்லை. பல்வேறு தொகைக்கு பல சீட்டுக்-களை தந்தை, மகள் நடத்தியுள்ளனர். நம்பிக்கை அடிப்படையில் மக்கள் சேர்ந்துள்ளனர். பணத்தை கொடுக்க முடியாத நிலையில் அழகர்சாமி தலைமறைவாகி விட்டார். அழகர்சாமி அதிகம் மொபைல் போனை பயன்படுத்துவதில்லை. மாரியம்மாள் சிறையில் உள்ளார். ஒரு முறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். போலீஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்-டது. இந்த முறைகேட்டுக்கு மூளையாக மாரியம்மாள்தான் செயல்பட்டுள்ளார். அழகர்சாமி தனது வீட்டை, 80 லட்சம் ரூபாய்க்கு முன் கூட்டியே விற்று விட்டார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு பெறும் வீட்டை, ஏதோ ஒரு திட்டத்துடன் விற்-றுள்ளார். இதனால் இவ்வழக்கில் வீட்டை சேர்த்து பாதிக்கப்பட்-டவர்களுக்கு தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்க இயலுமா என்பது சட்ட வல்லுனர்கள் கருத்துக்கு பின்னரே தெரிவிக்க முடியும். இவ்வாறு போலீசார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ