மாவட்ட கூடைப்பந்து: தாராபுரம் பள்ளி வெற்றி
திருப்பூர், பள்ளிகல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட மாணவர் கூடைப்பந்து போட்டி, நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 14 மற்றும், 17 வயது இரு பிரிவிலும் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி வென்று, மாநில போட்டிக்கு தேர்வானது. இதில், 14 வயது பிரிவில் ஐந்து, 17 மற்றும் 19 வயது பிரிவில் முறையே, ஆறு மற்றும் ஏழு அணிகள் என மொத்தம், 18 அணிகள் பங்கேற்றன. 14 வயதினர் பிரிவில், தாராபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அணி, திருப்பூர், டீ பப்ளிக் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவிலும் தாராபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அணி அசத்தியது; உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக், 2வது இடம் பெற்றது. 19 வயது பிரிவில், நஞ்சப்பா பள்ளி அணி வெற்றி பெற்றது; உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. 14 மற்றும், 17 வயது பிரிவில் வெற்றி பெற்ற தாராபுரம் அரசு பள்ளி, 19 வயது பிரிவில் முதலிடம் பெற்ற நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அணிகள் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளன.