உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொலைபேசி எண்ணை குறிப்பிடாமல் ரகசியம் காக்கும் மாவட்ட சிறை நிர்வாகம்

தொலைபேசி எண்ணை குறிப்பிடாமல் ரகசியம் காக்கும் மாவட்ட சிறை நிர்வாகம்

கோபி, கோபி அருகே கச்சேரிமேட்டில், அரசு மருத்துவமனை சாலையில், ஈரோடு மாவட்ட சிறை இயங்குகிறது. இங்கு பத்து அறைகளில், தலா, 20 பேர் என, 200 பேரை அடைக்கலாம். நீதிமன்ற காவலில் உள்ள சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். நேற்றைய நிலவரப்படி, 179 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.மாவட்ட சிறையை தொடர்பு கொள்ள, 04285-221077 என்ற தொலைபேசி எண் பயன்பாட்டில் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த எண் பயன்பாட்டில் இல்லை. அதேசமயம் மாவட்ட சிறை பிரதான சுவரில் எழுதப்பட்டிருந்த, அந்த லேண்ட் லைன் எண்ணும் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட சிறையை தொடர்பு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து சிறைத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'பழைய லேண்ட்லைன் எண்ணுக்கு பதிலாக, 04285-221076 என்ற எண் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பழைய எண்ணை அழித்துள்ளோம். புதிய எண் எழுதி வைக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை