ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், 52 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், ஈரோடு ஸ்டேஷனில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பயணிகள் நடைமேம்பாலம், புதிதாக கட்டப்படும் கட்டடம், பயணிகள் காத்திருக்க அமைக்கப்பட்டுள்ள கூடாரம், அங்கிருந்த காலியிடம், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பணிகளை தரமானதாகவும், துரிதமாகவும் முடிக்கவும், மேம்பாட்டு பணிகளால் பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வசதிகளை தற்காலிக ஏற்படுத்தி கொடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.