மேலும் செய்திகள்
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
25-Sep-2024
ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட் வணிக வளாகம், அதனை ஒட்டிய பகுதியில் ஜவுளி வாரச்சந்தை, டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு சாலை பகுதிகள், ஈஸ்வரன் கோவில் வீதிகள் மற்றும் பனியன் மார்க்கெட் பகுதிகளில் வாரச்-சந்தை ஜவுளி விற்பனை நடந்தது.இதுபற்றி, கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறிய தாவது: தீபாவளிக்கு இன்னும், 29 நாட்களே உள்ள நிலையில் புதிய ஆடைகள் கடந்த ஒரு வாரமாக வரத்தாகிறது. மும்பை, சூரத், கோல்கட்டா, பெங்களூரு உட்பட பல பகுதிகளில் இருந்தும் நவீன ஆடைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதேநேரம், தீபாவளிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள் விரைவில் வந்து மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்காக ஆடைகளை வாங்கி செல்வர். இருப்பினும் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், சில கடைக்கா-ரர்கள், வியாபாரிகள் மட்டுமே குறைந்த அளவு ஆடைகளை வாங்கி சென்றனர். நேற்று, 30 சதவீத ஆடைகள் விற்பனையாகி உள்ளது. மொத்த விற்பனை முற்றிலும் குறைந்தே காணப்பட்-டது. மாத துவக்கம் என்பதால் வரும் நாட்களில் மொத்த விற்-பனை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கூறினார்.அதற்கேற்ப சாலை ஓர கடைகள், வாகனங்களில் வைத்து ஜவுளி விற்பனை, குடோன் விற்பனை அதிகமாகவே காணப்பட்டது. ஜவுளி வாங்க வியாபாரிகளை விட பொதுமக்கள் அதிகமாக வந்-திருந்தனர்.
25-Sep-2024