மேலும் செய்திகள்
பூத் ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம்
05-Oct-2025
காங்கேயம்: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது. நகர தி.மு.க., செயலாளர் சேமலையப்பன் தலைமை வகித்தார்.கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான சாமிநாதன், தி.மு.க., தேர்தல் மண்டல பொறுப்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், தொகுதி பொறுப்பாளர் கண்ணப்பன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் பேசினர். கட்சி உறுப்பினர் சேர்க்கை, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம், சென்னிமலை ஒன்றிய நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025