பேனரை கிழித்த நாய்கள் சிசிடிவியால் அம்பலம்
புன்செய்புளியம்பட்டி, மா.கம்யூ., தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., சார்பில், தமிழக மாநில மாநாடு நடக்கிறது. இதுகுறித்த பிளக்ஸ் பேனர் பவானிசாகரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, மார்க்கெட் சதுக்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. பேனர் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சி.ஐ.டி.யு., நிர்வாகிகள், பவானிசாகர் போலீசில் புகாரளித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் இரு தெருநாய்கள் பிளக்ஸ் பேனரை, வாயால் கடித்து குதறி கிழித்தது பதிவாகி இருந்தது தெரிய வந்தது.