கூத்தம்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு பாத்திரங்கள் வழங்கல்
பவானி, பவானி அருகே கேசரிமங்கலம் பஞ்., கூத்தம்பட்டியில் அங்கன்வாடிமையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு சமைத்து உணவு பரிமாறுவதற்கு, போதிய அளவில் பாத்திரங்கள் இல்லாமல் இருந்தது. இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த மகளிர் குழுவினர், 5,000 ரூபாய் மதிப்பில் சமையல் செய்யும் பாத்திரங்களை வாங்கி, அங்கன்வாடி மையத்திற்கு கொடுத்தனர். இதற்கு அங்கன்வாடி ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.