காலை உணவு திட்டத்தை தாரை வார்க்க வேண்டாம்
ஈரோடு:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.சத்துணவு ஊழியர் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும். சத்துணவு பணியாளர்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தினர்.