போக்சோ வழக்கில் டிரைவர் கைது
காங்கேயம்; திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த டிரைவர் சுதாகர், 25; இவர், 27 வயது பெண்ணின் இரண்டாவது கணவர். இப்பெண்ணுக்கு, 13 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமியிடம் சுதாகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமி அளித்த புகா-ரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் சுதாகரை கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.