உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் டைமிங் பிரச்னை டிரைவர், கண்டக்டர் மோதல்

அந்தியூரில் டைமிங் பிரச்னை டிரைவர், கண்டக்டர் மோதல்

அந்தியூர், :பவானியிலிருந்து குறிச்சி, பூனாச்சி, பட்லுார் நால்ரோடு வழியாக அந்தியூருக்கு, எஸ்.பி.எம்., தனியார் பஸ் தினமும் காலை, 9:50 மணிக்கு வருகிறது. இதேபோல் மேட்டூரிலிருந்து கோபி செல்லும் லட்சுமி விலாஸ் பஸ், பூனாச்சி, பட்லுார் நால்ரோடு வழியாக, காலை, 9:36 மணிக்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக லட்சுமி விலாஸ் பஸ், 9:45 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளது. இதனால் எஸ்.பி.எம்., பஸ்ஸில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. முதல் நாளே இது தொடர்பாக அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் முன், இரு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் வாய் தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று, 9:50 மணிக்கு லட்சுமி விலாஸ் பஸ் அந்தியூர் வந்துள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டில் இரு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவதாம் மோதலாக மாறியது. வாய் தகராறு முற்றி, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். வேடிக்கை பார்க்க பயணிகள் திரண்டதால் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூர் போலீசார் இரு பஸ்களையும் பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பின் பஸ் உரிமையாளர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் லட்சுமி விலாஸ் பஸ், இனி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும் என உரிமையாளர் உறுதியளிக்கவே பறிமுதல் செய்த பஸ்களை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை