மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
ஈரோடு ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன், 37. டாடா ஏஸ் வாகன டிரைவர். ஆப்பக்கூடலில் உள்ள ராம்லா கன்ஸ்டிரக் ஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் சார்பில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைக்கு, டாடா ஏஸ் வாகனத்தில் மர பொருட்களை நேற்றுமுன்தினம் இரவு ஏற்றி கொண்டு வந்தார்.பொருட்களை தொழிலாளர்கள் இறக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். மணிகண்டன் அங்கு மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டு இருந்தார். அங்கிருந்து கிளம்பும் முன், சார்ஜரை சுவிட்ச்சில் இருந்து எடுக்க முற்பட்டார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சுருண்டு விழுந்தார். நேற்று காலை அங்கு வந்த தொழிலாளர்கள் கவனித்து, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணிகண்டனுக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர்.