ஓடும்போது டிரைவருக்கு வலிப்பு டூவீலர், கார் மீது மோதிய கார்
ஈரோடு:ஈரோட்டில் சென்னிமலை சாலையில் இருந்து சுசூகி எஸ் கிராஸ் கார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நேற்று மாலை வந்தது. திடீரென ரயில்வே ஸ்டேஷன் எதிரே முன்னால் சென்ற டூவீலரில் மோதியும் நிற்காமல், மெதுவாக சென்ற வோல்ஸ்வேகன் காரின் பின்புறம் மோதி நின்றது. இதைப்பார்த்த மக்கள் சத்தமிட்டபடியோ ஓடினர். அங்கு சென்று பார்த்த போது விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவரை காரில் இருந்து இறக்கி மக்கள் முதலுதவி செய்தனர். டூவீலரில் சென்ற இரு பெண்களும் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. அவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இரு கார்களும் சேதம் அடைந்தன. சுசூகி எஸ் கிராஸ் காரை ஓட்டி வந்தது சேகர், 39, என்பதும், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான கார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.