உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் போலீஸ் இல்லா புறக்காவல் நிலையம் போதை ஆசாமிகள் ஹேப்பி; பெண் பயணிகள் அச்சம்

காங்கேயத்தில் போலீஸ் இல்லா புறக்காவல் நிலையம் போதை ஆசாமிகள் ஹேப்பி; பெண் பயணிகள் அச்சம்

காங்கேயம், :காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசார் இல்லாததால், போதை ஆசாமிகள் சாவகாசமாக சுற்றி திரிகின்றனர். இவர்களால் ஏதேனும் பாதிப்பு வருமோ? என்று பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள், 1,000 முறை வந்து செல்கின்றன. பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண்கள், மக்கள் என பல ஆயிரக்ணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் குற்ற சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் செயல்பட்டது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணி மற்றும் ரோந்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது.இதனால் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் இருக்கை போதை ஆசாமிகளின் மெத்தையாகி விட்டது. அவர்கள் படுத்துறங்குவதால் பயணிகள் பயன்படுத்த முடியாமல், குறிப்பாக பெண்கள் அச்சத்தில் உள்ளனர். மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி முடிந்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்சுக்கு, மாணவியர் நீண்ட நேரம் காத்திருப்பர். இவர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட நிழற்கூடத்தையும் போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து விட்டனர். இதனால் கடைகளின் முன் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.போலீசார் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு கஞ்சா விற்பனை மையமாக பஸ் ஸ்டாண்ட் மாறியுள்ளதாக வணிகர்கள், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கஞ்சா ஆசாமிகள் போதையில் சண்டையிடுவதும் அதிகரித்து விட்டது. போதை ஆசாமிகள், கஞ்சா விற்பனை கும்பல், பாலியல் சீண்டல் பேர்வழி என அத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில் பஸ் ஸ்டாண்டுக்கு பயத்துடன் வந்து அச்சத்துடன் சென்று கொண்டிருக்கிறோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர். பெண்கள், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, போலீசாரை நியமித்து, புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி