உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முருங்கை கிலோ ரூ.20

முருங்கை கிலோ ரூ.20

காங்கேயம்; வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 5 டன் முருங்கை வரத்தானது. செடி முருங்கை கிலோ, 30 ரூபாய், மர முருங்கை, 40, கரும்பு முருங்கை, 50 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 13 டன் முருங்கை வரத்தானது. செடி முருங்கை, 20 ரூபாய், மர முருங்கை கிலோ, 20 ரூபாய், கரும்பு முருங்கை, 35 ரூபாய்க்கு விற்பனையானது. முருங்கை சீசன் துவங்கியுள்ளதால் விலை குறைந்து விட்டது. வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும் என்பதால், விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ