உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடையில் இருந்து நுரையுடன் சாயக்கழிவு காவிரியில் கலப்பு

ஓடையில் இருந்து நுரையுடன் சாயக்கழிவு காவிரியில் கலப்பு

ஈரோடு:ஈரோட்டில் சாய, சலவை, பிளீச்சிங், தோல் ஆலைகளில் பெரும்பாலானவை, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்காலில் திறந்து விடுவடு வழக்கம். சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரவில் மட்டுமின்றி பகலிலும் ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் திறக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் சாய, சலவை, தோல் ஆலை கழிவு கள் வைராபாளையம் அருகே காவிரி ஆற்றில் சென்று கலந்தது.இதுபற்றி அப்பகுதியினர் கூறியதாவது: காவிரி ஆற்றில் இக்கழிவுநீர் கலந்து பின்னர், பம்பிங் ஸ்டேஷனில் இருந்து வரும் நீரை, ஈரோடு உட்பட பல மாவட்ட மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் வெளியேற்றுவதை தடுத்து, சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ