எலி காய்ச்சல் பலி எதிரொலி சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு
எலி காய்ச்சல் பலி எதிரொலிசுகாதாரத்துறையினர் கண்காணிப்புஅந்தியூர், அக். 3-அந்தியூர் அருகே காட்டூரை சேர்ந்த தினேஷ்குமார், 13, என்ற சிறுவன் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அப்பகுதியில், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனலட்சுமி தலைமையில், மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.எலி காய்ச்சலால் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள, 36 வயது பெண்ணுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில், பாஸிட்டிவ் வந்துள்ளதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். மேலும் காட்டூர் பகுதியில், வீடு தோறும், பொதுமக்கள் அனைவருக்கும், எலி காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொசு ஒழிப்பு பணியும் நடந்து வருகிறது. அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் கூறுகையில்,'' அந்தியூர் வட்டாரம் பர்கூர் மற்றும் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இதுவரை யாருக்கும் எலி காய்ச்சல் கிடையாது. இருப்பினும் சுகாதாரத்துறை சார்பில், காய்ச்சல் தடுப்பு முகாம் ஆங்காங்கே நடத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.