உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிப்பர் மோதி முதியவர் பலி

டிப்பர் மோதி முதியவர் பலி

காங்கேயம் :தாராபுரம், குளத்துபாளையத்தை சேர்ந்தவர் முத்தசாமி, 71; இவருக்கு காங்கேயத்தில் சொந்த வீடு உள்ளது. தாராபுரத்தில் இருந்து காங்கேயத்தில் உள்ள வீட்டுக்கு யமாஹா பைக்கில், நேற்று காலை, 9:00 மணியளவில் கிளம்பினார். காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுப்பினர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ