மேலும் செய்திகள்
அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவரின் கால் சிதைவு
20-Oct-2024
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், அஜந்தா நகரை சேர்ந்தவர் நாகராஜன், 75, தனியார் நிறுவன செக்யூரிட்டி. நேற்று முன்தினம் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மொபட்டில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. நிலை தடுமாறி சாலையில் விழுந்தவர் மீது பஸ் பின்சக்கரம் ஏறியதில், இடது கால் சிதைந்து படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றிரவே இறந்தார். பஸ் டிரைவர் செந்தில்குமார், 50, மீது, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20-Oct-2024