உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐந்து பவுன் நகை மாயம் போலீசில் மூதாட்டி புகார்

ஐந்து பவுன் நகை மாயம் போலீசில் மூதாட்டி புகார்

கோபி, பவானி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கமலம், 76, கூலி தொழிலாளி; கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, 3-பி என்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார். கரட்டடிபாளையம் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றபோது, கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்தது. பஸ்சில் பயணித்தபோது தன்னுடன் பயணித்த பெண் மீது சந்தேகம் இருப்பதாக, கமலம் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ