உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4.71 லட்சம்

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4.71 லட்சம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை, 1.85 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.நேற்று, ஈரோடு கிழக்கு தொகுதியில், 75,000 ரூபாய், மொடக்குறிச்சி தொகுதியில், 1.96 லட்சம் ரூபாய், பவானிசாகரில், 2 லட்சம் ரூபாய் என, 4 லட்சத்து, 71,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.இத்துடன் சேர்த்து, 1 கோடியே, 90 லட்சத்து, 37,770 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். அதில், 1 கோடியே, 77 லட்சத்து, 77,670 ரூபாயை உரிய ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 12 லட்சத்து, 60,100 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை