உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈமு மோசடி நிறுவன சொத்து; 9ல் ஏலம்

ஈமு மோசடி நிறுவன சொத்து; 9ல் ஏலம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் ஈமு கோழி நிறுவனங்கள் கவர்ச்சி திட்ட அறிவிப்பு மூலம் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று, பல கோடி மோசடி நடந்துள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர் நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, மோசடி ஈமு கோழி நிறுவன அசையும், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது.தற்போது நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அன்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனம், சுவி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கிரீன் லைப் பார்ம் அன்ட் பவுல்ட்ரி நிறுவனம், சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா நிறுவனம், கொங்குநாடு ஈமு அன்ட் பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனம் என, ஐந்து மோசடி நிறுவனங்களில் ஜப்தி செய்யப்பட்ட அசையா, சொத்துக்கள், வரும், 9ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை ஏலம் விடப்படுகிறது. இத்தகவலை ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !