மேலும் செய்திகள்
ஈரோடு புத்தகத்திருவிழா: முன்னேற்பாடு பணி ஆய்வு
24-Jul-2025
ஈரோடு, ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், இன்று முதல் வரும், 12ம் தேதி வரை அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோடு புத்தகத்திருவிழா நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்கிறார். 2ம் தேதி முதல் தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை புத்தக கண்காட்சி செயல்படும். தினமும் மாலை, 6:00 மணிக்கு சொற்பொழிவு நடக்கும். மொத்தம், 230 அரங்குகளில் நுால்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அனைத்து நுால்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி உண்டு. கல்வி நிறுவனங்கள், நுாலகங்களுக்கு கூடுதல் விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
24-Jul-2025