மாநகராட்சி திட்ட பணிகளை ஈரோடு கமிஷனர் ஆய்வு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டு புதுமை காலனியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, தேவையான குடிநீர் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆணையர் அர்பித்ஜெயின் நேற்று ஆய்வு செய்தார்.குடிநீர் வழங்குவது, குழாய்கள் பதிப்பது போன்ற பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதேபோல், 32வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் செயல்படும் மாநநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்புகள், கழிவறை கட்டுமான பணிகள், 44வது வார்டு காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைப்பது.10வது வார்டு செங்கோடம்பாளையத்தில் செயல்படும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை, வில்லரம்பட்டி அருகில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் மற்றும் சத்யாநகரில் கான்கிரீட் சாலை அமைப்பது, செம்மாம்பாளையத்தில் தார்ச்சாலை சீரமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உடன் இருந்தனர்.