மேலும் செய்திகள்
ஜாமினில் வந்து தலைமறைவான இருவர் மீண்டும் கைது
16-Oct-2026
ஈரோடு:ஈரோடு சாஸ்திரி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சிலம்பரசன், 39; ஈரோட்டில் நடந்த அடிதடி வழக்கில் தொடர்புடைய இவர் தலைமறைவானார். டிச.,12க்குள் ஈரோடு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.3ல் நீதிபதி முன் ஆஜராக வேண்டும். இல்லையேல் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.இதேபோல் ஈரோடு சூரம்பட்டி நேருவீதியை சேர்ந்தவர் சாகுல், 34; திருட்டு வழக்கில் தொடர்புடைய இவர் தலைமறைவாகி விட்டார். இவரும் டிச.,12க்குள் ஈரோடு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.3ல் நீதிபதி முன் ஆஜராக வேண்டும். இல்லையேல் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார். இத்தகவலை சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
16-Oct-2026