பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 11 ஆண்டுகளில் 5 முறை 2ம் இடம்
ஈரோடு, பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் கடந்த, 11 ஆண்டுகளில், அதாவது, 2015 முதல் நடப்பாண்டு வரை, ஐந்து முறை மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2021ல் கொரோனா தொற்றால் தேர்வு நடக்கவில்லை. இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: கடந்த, 2018, ௨௦௧௯, 2020 மற்றும் 2024, 2025 ஆண்டுகளில், ஈரோடு கல்வி மாவட்டம் மாநில அளவில் ஐந்து முறை இரண்டாமிடம் பெற்றது. கடந்த, 2022ல், 13வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், 2023ல் எட்டாவது இடத்துக்கு முன்னேறியது. இதேபோல், 2014, 2016ல் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது. இவ்வாறு கூறினர்.