உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி அணை முன்னதாக திறக்கபாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கீழ்பவானி அணை முன்னதாக திறக்கபாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஈரோடு: கீழ்பவானி அணையில் ஆகஸ்ட் 15க்கு முன் திறக்க வேண்டும், என கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, கலெக்டர் காமராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் அளித்துள்ள மனு:காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12க்கு பதிலாக ஜூன் 6ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து திருப்திகரமாக இருந்ததால் முன்னதாக திறக்கப்பட்டது.முன் தேதியிட்டு திறப்பதால், குறுவை சாகுபடி விளைச்சல் கூடுதலாக இருக்கும். பருவமழை துவங்கும் முன்பாக அறுவடை முடிந்துவிடும்.கீழ்பவானி அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 15ல் தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அணையின் வரத்தும், இருப்பும் திருப்திகரமாக உள்ளது.எனவே, அதற்கு முன்பாவே தண்ணீர் திறக்க வேண்டும். அரசு முன்கூட்டியே தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும். விதை, உரம் உட்பட இடுபொருட்கள், நிலத்தை தயார் செய்ய ஏதுவாகும்.அணை தலைமை கால்வாயின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டும்பணியும், சில இடங்களில் கால்வாயில் கட்டுமானப்பணியும் நடக்கிறது. இதர மராமத்து பணிகளையும் காரணம் காட்டி தண்ணீர் திறப்பது தள்ளி போகிறது.விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால், பாசன பகுதி எங்கும் இருக்கக்கூடிய பகிர்வு மற்றும் கிளை கால்வாய்களின் மராமத்துப்பணியை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள பணியாளர்களை வைத்து விரைவாக செய்து முடிக்க வேண்டும்.கீழ்பவானி அணை பாசனத்தின் தலைமை கால்வாய், பகிர்வு கால்வாய், கொப்பு வாய்க்கால் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சில இடங்களில் குறைவாகவும், பல இடங்களில் கூடுதலாகவும் ஆக்கிரமிப்பு உள்ளது.இதனால் சிக்கன நீர் நிர்வாகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை எப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் நிலையான கல்லை நடவு செய்ததுபோல, கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கற்கள் நட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை