உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / "ஓராண்டுக்கு முன் விற்ற போலி உரம் இப்போதில்லை வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

"ஓராண்டுக்கு முன் விற்ற போலி உரம் இப்போதில்லை வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையம் : ''ஓராண்டுக்கு முன் போலி உரம் விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் போலி உரம் ஒழிக்கப்பட்டுள்ளது,'' என, வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோபியில் அவர் கூறியதாவது: கோபி நகராட்சி 99.762 கிலோ மீட்டர் சதுர பரப்பளவு கொண்டது. 2006-11 வரை நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் சிறப்பு சாலை திட்டத்தில், 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட், சாக்கடை வசதி, சிறுபாலம் ஆகிய பணி நடந்தது.

சிறப்பு சாலை இரண்டாவது திட்டத்தில் 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 கி.மீ.,க்கு சாலை வசதி செய்யப்பட உள்ளது. கோபி நகராட்சியில் 1, 4, 5, 6, 13, 14, 16, 17 முதல் 23, 26 முதல் 30 ஆகிய வார்டுகளில் விடுபட்ட சாலைப்பணி முடிக்கப்படும். நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் வகையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்படும். எம்.எல்.ஏ., நிதி 36 லட்சம் மதிப்பீட்டில் நஞ்சகவுண்டன்பாளையத்தில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படும். மூன்று மாதத்தில் குடிநீர் பிரச்னை சரி செய்யப்படும்.

அளுக்குளியில் 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறி பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் பின்புறம், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட உள்ளது. கொளப்பலூரில் 42 ஏக்கரில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் போலி உரம் விற்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் போலி உரம் ஒழிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகளிடம் இருந்து நேரடியாக பூச்சிக் கொல்லி மருந்து, உரங்கள் பெறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி தலைவர் ரேவதிதேவி, முன்னாள் எம்.பி., காளியப்பன் மற்றும் அ.தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி