உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி நகராட்சிகாங்., வேட்பாளர் மனு

கோபி நகராட்சிகாங்., வேட்பாளர் மனு

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக சித்ரா விஸ்வநாதன் (48) போட்டியிடுகிறார். பி.ஏ., பட்டதாரியான இவர், சிட்டிங் கவுன்சிலராக உள்ளார். கோபி பசுமை வயல் லயன்ஸ் சங்க செயலாளராக இருந்த போது பல்வேறு சேவைகளை செய்துள்ளார். கட்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது கணவர் விஸ்வநாதன், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளராக உள்ளார்.''நகரில் நிறைவேற்றப்படாத பாதாள சாக்கடை திட்டம், கீரிப்பள்ளம் ஓடை சீரமைப்பு பணி, குடிநீர், பொது சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நகரின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன்,'' என, சித்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை