| ADDED : அக் 07, 2011 12:59 AM
சென்னிமலை: சென்னையில் செயல்படும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி தொழிற்நுட்ப
மையம் (ஐ.ஆர்.எஸ்.டி.,) சார்பாக, மைலாடி ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக்
கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது. இதில் 13 கல்லூரிகளை சேர்ந்த
எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், ஐ.டி., மற்றும் எலக்ட்ரானிக்
துறையைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எழுத்து தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று
கட்டங்களாக, தேர்வு நடத்தப்பட்டு மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், இறுதியில் நடந்த நேர்முகத் தேர்வில் 60 மாணவ, மாணவியர் கலந்து
கொண்டனர். ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் 24 பேர்
உள்பட 36 பேர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, பணி ஆணை
வழங்கும் நிகழ்ச்சி, கல்லூரி தாளாளர் மக்கள் ராஜன் தலைமையில் நடந்தது.
ஐ.ஆர்.எஸ்.டி., மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் சுகேஷ், விஷ்ணு பிரசாத்
கல்லூரி முதல்வர் லோகமூர்த்தி, துணை முதல்வர் செந்தில்குமார் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.